அண்மைய செய்திகள்

recent
-

80 வயது வரை பற்கள் விழாது -


பற்களை பல ஆண்டுகள் விழாமல் பாதுகாக்க உதவும் வழிகள் குறித்து இங்கு காண்போம்.

பல் துலக்கும் முறை

காலை உணவுக்கு பின்னர் பல் துலக்குவது என்பது மோசமான செயலாகும். ஏனெனில், சாப்பிட்ட பின் வாயில் சுரக்கும் அமிலமானது, பல் ஈறுகளில் பட வைக்கும். ஆரஞ்சு பழச்சாறு போன்ற சர்க்கரை பானங்களை அருந்தினால் மேலும் ஈறுகள் பாதிப்படையும். எனவே, காலை எழுந்ததும் பல் துலக்குவது மிகவும் நல்லது.

நாக்கை பராமரித்தல்

நாக்கு என்பது பாக்டீரியா மற்றும் உணவு குப்பைகள் இருக்கும் இடமாகும். இதனால் சில நேரங்களில் மோசமான வாசனை வீசக்கூடும். பாக்டீரியாவைக் கொல்வதற்கு நாக்கு scraper பயன்படுத்த வேண்டும். மேலும், பேக்கிங் சோடா பற்பசையை பயன்படுத்துவதன் மூலம் வாயில் pH அளவு அதிகரிக்கும்.

Teeth Flash

பற்களை துலக்குவதன் மூலம் 60 சதவித பரப்பில் உள்ள கிருமிகள் நீங்கும். ஆனால், பாக்டீரியா தகடு பற்கள் இடையே தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும். எனவே, பல் ஈறுகளின் வீக்கத்தை தடுக்க, தினமும் Teeth Flash-ஐ பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், பற்களுக்கு இடையே இறுக்கமான இடைவெளிகளை சுத்தம் செய்யும்.

பானங்களை தவிர்த்தல்

உணவில் உள்ள சர்க்கரைகள் வாயில் பாக்டீரியா தகடு மூலம் அமிலமாக மாறும். இதனால் பற்சிதைவு ஏற்படும். ஸ்மூத்திஸ் என்பது ஒரு வகை மென்மையான பானம் ஆகும். உணவுக்கு இடையில் இதனை உண்பது பல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரையை சேர்த்திருக்கும் பானங்களை தவிர்ப்பது பற்களுக்கு மிக நல்லது.

பற்கூச்சத்தில் கவனம்

பற்கூச்சம் என்பது பொதுவான ஒரு பிரச்சனையாகும். பல்திசு வெளியே தெரிதல், காற்று அட்டைக்கப்பட்ட பானங்கள், சில மருந்துகள் மற்றும் வெண்மை நிறத்துக்கான சிகிச்சைகள் ஆகியவை பற்கூச்சத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும். பற்களில் வலி அதிகம் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும். எனவே, Silicone Toothbrush-ஐ பயன்படுத்துவது சிறந்தது.

இவற்றை செய்து வந்தால் நமது பற்களை 80 வயது விழாமல் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம்.
80 வயது வரை பற்கள் விழாது - Reviewed by Author on June 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.