ரஜினியை கைது செய்யவேண்டிய நிலை வரும்?
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர். இன்றும் அவர் படங்களுக்கு வரும் கூட்டம் என்பது பலராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடியில் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
சமூக விரோதிகளால் தான் போராட்டம் கலவரமானது என்று அவர் கூறியிருப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல கட்சிகள் சார்ந்தவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, முன்னணி நடிகர் சரத்குமார் ’ரஜினி ஏதோ சமூக விரோதிகள் புகுந்தனர் என்று சொல்கின்றாரே, அவர்கள் லிஸ்ட்டை கொடுங்கள், இல்லையெனில் இப்படி பேசியதற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யும் நிலை வரும்’ என கூறியுள்ளார்.
சகநடிகர் மற்றும் ரஜினியின் நண்பரே அப்படி கூறுவது எல்லோரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியை கைது செய்யவேண்டிய நிலை வரும்?
Reviewed by Author
on
June 01, 2018
Rating:

No comments:
Post a Comment