பேரறிவாளனை கருணை கொலை செய்திடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர் -
இந்நிலையில் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்திய ஊடகம் ஒன்றிற்கு தனது நேர்காணல் வழங்கியுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் கூறுவதாவது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது?
இந்த வழக்கில் வாக்குமூலம் வாங்கிய அதிகாரிகளில் இருந்து நீதிபதிகள் வரை எல்லோருமே இவர்களை விடுதலை செய்யலாம் என்று சொன்னார்கள்.
மாநில அரசும் எங்களது நிலைப்பாடும் அதுதான், மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது.
இவர்கள் இரண்டு பேரின் ஆட்சியில் நாங்கள் பட்டதுபோதும், இந்த இரண்டு அரசுகளுக்கும் மனு கொடுக்கப்போகிறேன்.
என் மகனுக்கு 47 வயது, என் மகனை கருணை கொலை பண்ணிவிடுங்கள், என்னை சாகடித்துவிடுங்கள். உங்கள் ஆட்சியில் நாங்கள் வாழ்ந்தது போதும் என்று மனு கொடுக்கப்போகிறேன்.
எங்கள் வாழ்க்கையை போய்விட்டது, நாசம் பண்ணிவிட்டார்கள் என கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
பேரறிவாளனை கருணை கொலை செய்திடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர் -
Reviewed by Author
on
June 16, 2018
Rating:

No comments:
Post a Comment