கமல்ஹாசனின் கட்சி பெயரை பதிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம் -
அண்மையில் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற கமல், அங்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தில் சாதாரண ஆலோசனை மட்டுமே நடைபெற்றது. தேர்தல் ஆணையம் அழைத்ததின் பேரில் மட்டுமே இன்று டெல்லி வந்ததாகவும் அதிகாரிகள், சில கேள்விகள் கேட்டதாகவும் விரைவில் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் சின்னம் பற்றிய கேள்விக்கு அதுபற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று முறையாக பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கமல்ஹாசனின் கட்சி பெயரை பதிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம் -
Reviewed by Author
on
June 23, 2018
Rating:

No comments:
Post a Comment