தலைமன்னார் கடலில் மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்களை காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு
குறித்த மீனவர்கள் நேற்று காலை தலைமன்னார் கடற்பகுதியூடாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தோ. கிறிஸ்ரின் கூஞ்ஞ, தோ.எமல்ரன் கூஞ்ஞ ஆகிய இரு சகோதரர்களே காணாமல் போயுள்ளனர்.
கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக ஒரு படகில் சென்றுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
இது வரை இவர்கள் கரை சேராத காரணத்தினால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் பத்து படகுகளில் நாற்பது மீனவர்கள் கடலில் தேடுதலை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் அந்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடைய படகு இயந்திரம் பழுதடைந்திருந்தால் வட கடலிலே இவர்கள் தொழிலை மேற்கொண்டதால் இவர்கள் யாழ் பகுதி அல்லது இந்திய கடல் பக்கமோ அடைந்திருக்க சாத்தியக் கூறுகள் இருப்பதால் இப் பக்கம் நோக்கியே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த ஓரிரு தினங்களாக தலைமன்னார் கடல் பகுதியில் கடும் காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டபோதும் இவர்கள் கடலில் போடப்பட்ட தங்களுடைய வலைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்பட கூடாது என்ற நோக்கத்துடனேயே தங்கள் வலை தொகுதியை காப்பாற்றுவதற்காக கடும் காற்றிலும் கடலுக்குச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
தலைமன்னார் கடலில் மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்களை காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு
Reviewed by Author
on
June 10, 2018
Rating:

No comments:
Post a Comment