அண்மைய செய்திகள்

recent
-

இராஜ இராஜ சோழனால் ஈழத்திற்கு கொடுக்கப்பட்ட பொக்கிஷம்!


பழந்தமிழர் நாட்டை ஆண்ட மூவேந்தருள் ஒருவரான இராஜ இராஜ சோழ மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட தஞ்சை பெருவுடையார் ஆலயம் இந்திய தேசத்தில் தமிழர் புகழ்பேசும் அதிசயமாக பார்க்கப்படுகின்றது.
இந்த ஆலயத்தை தரிசிப்பதற்கென உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் ஆயிரக்கணக்கானர்வகள் வருவது வழமை.

குறித்த ஆலயம் அத்தனை சிறப்பும், சக்தியும் வாய்ந்தது என்பது யாவரும் அறிந்ததே, குறித்த ஆலயத்தை நிர்மாணித்த அதே இராஜ இராஜ சோழன் மன்னனால் ஈழத்தின் பொலன்னறுவை ஜனனாத மங்களத்தில் நிர்மாணிக்கப்பட்ட வானவன் மாதேவி ஈஸ்வரன் ஆலயம் என்று அழைக்கப்படுகின்ற கற்கோவிலும் அத்தகைய சிறப்புக்குரியதே..
இயற்கை அன்னையின் பரிபூரண கொடை நிறைந்த இடமாக இந்த வானவன் மாதேவி ஈஸ்வரன் ஆலயம் விளங்குகின்றது.

ஈழத்தில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களுக்கு நிகராக பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷம்தான் இந்த ஆலயம், ஆனால் இது எம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறியே!
தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை நிர்மாணித்த இராஜ இராஜ சோழனின் மற்றுமொரு சிறந்த படைப்பே இந்த வானவன் மாதேவி ஈஸ்வரர் ஆலயம்.
கொழும்பு, மட்டக்களப்பு பிரதான வீதியில், பொலன்னறுவையை அண்மித்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் கண்கானிப்பின் கீழ் இரண்டாம் சிவாலயம் என அழைக்கப்படும் இந்த சிவாலயத்தின் அமைவிடம் உள்ளது.
தனது மனைவியின் நினைவாக கி.பி 9ஆம் நூற்றாண்டில் இராஜ இராஜ சோழன் மன்னனால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
பல சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர்வாசிகளும் தொடர்ச்சியாக இந்த ஆலயத்திற்கு தரிசனம் பெற்றுக்கொள்வதற்காக நிதமும் வருகைத்தந்தவண்ணமுள்ளனர்.

மேலும், தொல்பொருள் திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இந்த ஆலயம் இருப்பதன் காரணமாக தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எந்நேரமும் வருகைத்தரமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலத்திற்கு முந்திய இந்த அரிய பொக்கிஷப் படைப்பு காலங்கள் தாண்டியும் நிலைத்திருக்க வழி செய்ய வேண்டியது தமிழராம் எமது பொறுப்பாகும்.
இராஜ இராஜ சோழனால் ஈழத்திற்கு கொடுக்கப்பட்ட பொக்கிஷம்! Reviewed by Author on June 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.