அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கம்பன் விழாவில் 09 பேருக்கு விருதுகள்-2018

நடாத்துகின்ற கம்பன் விழாவானது இம்முறையும் 04காவது தடவையாக கம்பன்விழா  03-06-2018 காலை 10-00 மணிக்கு நகரசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வுகளாக மேளதாளவாத்திய இசை முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர் மங்கள விளக்கேற்றல் அத்தோடு தமிழ்மொழி வாழ்த்துடன் நீலகண்டன் அரங்கில்
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கியமன்றத்தலைவர்
மகா ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் தலைமையில்
பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்-ஆய்வு போரசிரியர் முன்னிலையில்அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்துசிறப்பித்தனர் .

இவ்விழாவில் சிறப்பு நிகழ்வாக தமிழருவி  தமிழறிஞர்  த.சிவகுமாரன் நடுவராக கலந்து கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றதுடன்  இவ்வருடத்திற்கான  
கம்பன் புகழ் விருது தமிழுக்கும் சைவத்திற்கும் சமூகத்திற்கும் தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வரும் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்-ஆய்வு போரசிரியர் அவர்களுக்கும்

கலைஞர்கள் கௌரவிப்பில் 05 மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட கவிதை தமிழ் இலக்கியத்திற்கு சேவையாற்றிய 05வருக்கு  
கவிச்சுடர்  விருதும்
  •  க.நிறைவுமதி-வவுனியா
  • ஜெயம் ஜெகன் -முல்லைத்தீவு
  • தீபச்செல்வன் கிளிநொச்சி
  • தணு- நெடுந்தீவு
  •  வை-கஜேந்திரன் மன்னார்
  •  சமய சமூக சேவையினை கௌரவிக்கும் முகமாக    சமூகஜோதி விருது மனோ.ஐங்கரசர்மா குருக்கள்-நகரசபை உறுப்பினர் அவர்களுக்கும்
இசை இளம்பருதி விருதானது ஆசிரியர் பேணாட் றமேஸ் அவர்களுக்கும்
  • விசேட விதமாக 17 ஆண்டுகள்  சமய சமூக கலைசேவையாற்றிவரும் பு.மணிசேகரன் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் கலாச்சார உத்தியோகத்தராக  இருந்து பணி நிமித்தம் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் பணியாற்றுகின்றார் அவர்களுக்கு
 மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றம் கலாவிபூசிணி விருதும்,
மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் கலை நதி விருதும்
மன்னார் இந்துஆலயங்களின் ஒன்றியம்  சமூக ஒளி விருதும்
இன்னும் பல வாழ்த்துமடல்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


இவ்நிகழ்வில்  மேலும் ஒரு நன்கொடை வழங்கும்  நிகழ்வு
மன்னார்  மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனம்  கல்வியில் சாதனைபுரியும் மானவர்களுக்கு சாதனைச்சூரியன்  எனும் சின்னம் வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றது அவ்வாறாக கௌரவிக்கப்பட்ட 10 மாணவர்களின் பெற்றோர்கள் விரும்பி 500*10-5000ரூபாவினை மாணவர்களின் பங்களிப்பிற்கு வழங்குங்கள் என்னும் கோரிக்கைக்கு அமைவாக கம்பன் விழாவில் வத்து அந்நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.S.R.யதீஸ் அவர்கள்  மாந்தை மேற்கு அறநெறிக்கல்விக்கான அதிகாரசபையின் இயக்குனர் M.ரதிமாறன் குருக்கள் அவர்களிடம் பெற்றோர்கள் சார்பாக கையளித்தார்.

 விருதுகள் பெற்றவர்களுக்கும் நன்கொடை வழங்கியவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்

-தொகுப்பு வை-கஜேந்திரன்-


































மன்னார் கம்பன் விழாவில் 09 பேருக்கு விருதுகள்-2018 Reviewed by Author on June 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.