ரமழான் மாதத்திலே…
பிறை கண்டு
முறையாக ஐம்புலன்களை ஐக்கியமாக்கி ஐவேளை தொழவே
குறை தீர்க்கும் புனிதனே
இறை புகழ் அல்லாவே…
நிறை வாழ்வைத் தந்து
முறை வாழ்வை உணர்த்தும்
குறை இல்லா வள்ளலே-அல்லாவே
பறை முழங்கிடும் பாரினிலே
அதர்மங்கள் அழியவும்
தர்மங்கள் செழிக்கும் மாதம்
அல்குர்-ஆனின் ஆகமங்களை
அறிந்து தெளியும்-மாதமே
அற்புதமான ரமழானே
அண்டை அயலவர்
அனைத்து உயிரிலும்
அல்லாவைக்காணும்
அதிசய மாதமே-ரமழானே
துறைகள் ஒவ்வொன்றும்
பொறி முறை கண்டு
நெறி முறை தவறாமல் வாழ-எம்
உறைவிடமே உயிரானவரே-அல்லாஹ்
நோன்பின் மூலம் மகத்துவம்
மனித மாண்பை உணர்த்திடும்
பார் போற்றும் பண்பாளனே
பார்வையிலே பரவசம் தரும் நாயகனே
நானிலமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள்
நல்ல மூஃமினாக வாழ
முபாரக் முபாரக் முபாரக்
எல்லோரும் நல்லா வாழ
ஏகனே இன்ஷா அல்லாஹ்.
-கவிஞர்-வை-கஜேந்திரன்-
ரமழான் மாதத்திலே…
Reviewed by Author
on
June 14, 2018
Rating:

No comments:
Post a Comment