சர்வதேச யோகா தினம்-மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில்....படம்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் வியாழக்கிழமை 21-06-2018 காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வு வியாழக்கிழமை 21-06-2018 காலை 7.30 மணியளவில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
-இந்திய துணைத்தூதரக அதிகாரி ராமேஸ்வர் பக்தா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் கலந்து கொண்டார்.
-இதன் போது மாணவர்களுக்கு விசேட யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச யோகா தினம்-மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில்....படம்
Reviewed by Author
on
June 22, 2018
Rating:

No comments:
Post a Comment