தேசியத்தில் வெற்றிவாகை சூடிய சேர்த்த வேம்படி மகளிர் கல்லூரி!
இலங்கை பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் கண்டி, கில்வூட் கல்லூரி மற்றும் சென்.அந்தோனிஸ் கன்னியர்மடம் ஆகியவற்றின் கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்றது.
இந்தச் சுற்றுப்போட்டியின், இறுதிப் போட்டி கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் சென்.அந்தோனிஸ் கல்லூரி அணியை எதிர்தாடியது வேம்படி மகளிர் கல்லூரி.
முதல் கால்ப்பாதி முடிவில், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி, 15:05 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது கால்ப்பாதி முடிவில், 31:24 என்ற புள்ளிகள் அடிப்படையில் வேம்படி அணி முன்னிலை வகித்தது.
மூன்றாவது கால்ப்பாதியாட்டம் முடிவில் 49:28 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
நான்காவதும் இறுதியுமான கால்ப்பாதியாட்டம் முடிவில் 66:37 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்த வேம்படி அணி சம்பியனாகியது.
சிறந்த வீராங்கனையாக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நிதர்சனா நிர்மலேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதுடன்,
சிறந்த தற்காப்பு வீராங்கனையாக அனோசிகா அருன் கலைச்செல்வன் தெரிவு செய்யப்பட்டார்.
வேம்படி அணியின் பயிற்றுனராக பரமயோகநாதன் ராஜசோபனா செயற்பட்டார்.
தேசியத்தில் வெற்றிவாகை சூடிய சேர்த்த வேம்படி மகளிர் கல்லூரி!
Reviewed by Author
on
June 22, 2018
Rating:

No comments:
Post a Comment