தமிழ்நேசன் அடிகளாரின் நூல் மற்றும் இறுவட்டு வெளியீட்டு விழா
அருட்திரு. தமிழ்நேசன் அடிகளாரின் ‘தமிழியல் தடங்கள்’ என்ற நூலினதும் ‘அருளின் இராகங்கள்’ என்ற பாடல் இறுவட்டினதும் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (09.06.2018) காலை 10.00 மணிக்கு மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள குடும்பப்பபணி நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
‘தமிழியல் தடங்கள்’என்ற நூலானது தமிழ்நேசன் அடிகளாரின் 13 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கி.விசாகரூபன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செ.யோகராசா ஆகியோர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.
‘அருளின் இராகங்கள்’ என்ற பாடல் இறுவட்டானது தமிழ் நேசன் அடிகளார் எழுதிய 5 கிறிஸ்தவத் திருவழிபாட்டுப் பாடல்களையும் இன்னும் புதிய திருப்பலி நூலின் செபங்களுக்கான 7 பாடல்களையும் உள்ளடக்கியுள்ளது.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க குருவான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தின் சமூகத் தொடர்பு அருட்பணி மையமான ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனராகவும்‘மன்னா’ என்ற கத்தோலிக்க மாதாந்தப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார். இன்னும் பல்வேறு கலை-இலக்கிய-சமூக அமைப்புக்களின் உறுப்பினராகவும் இவர் உள்ளார். அடிகளார் இதுவரை 10 நூல்களையும் 4 இறுவட்டுக்களையும் வெளிக்கொணர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நேசன் அடிகளாரின் நூல் மற்றும் இறுவட்டு வெளியீட்டு விழா
Reviewed by Author
on
June 08, 2018
Rating:
Reviewed by Author
on
June 08, 2018
Rating:




No comments:
Post a Comment