இளமையாக இருக்க £100,000 பணத்தை செலவு செய்த பெண்: இறுதியில் என்ன ஆனது தெரியுமா? -
Sussex கவுண்டியை சேர்ந்தவர் ஐமி வீனஸ் (43). இவர் பல ஆண்டுகளாகவே தன்னை இளமையாக காட்டி கொள்ள பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சையை செய்து கொண்டுள்ளார்.
மூக்கு, கண்கள், உதடுகள், வயிறு, மார்பகம் என பல்வேறு பகுதிகளை இளமையாக காட்டி கொள்ள தொடர் சிகிச்சைகளை செய்து வருகிறார்.
இதற்காக ஐமிக்கு இதுவரை £100,000 பணம் செலவாகியுள்ளது, சிகிச்சைக்காக இன்னும் பணம் செலவிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐமி கூறுகையில், இதற்கு மேலும் அறுவை சிகிச்சை செய்தால் எனது உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை பற்றி எனக்கு கவலையில்லை.
என்றாவது ஒருநாள் நான் இறக்க தான் போகிறேன், அந்த இறப்பு என் இளமைக்கு உதவும் அறுவை சிகிச்சை மூலமாக வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.
என் 25 வயதிலிருந்து இது போன்ற சிகிச்சையை எடுத்து வருகிறேன், இறுதிவரை இப்படி தான் செய்வேன் என கூறியுள்ளார்.
இளமையாக இருக்க £100,000 பணத்தை செலவு செய்த பெண்: இறுதியில் என்ன ஆனது தெரியுமா? -
Reviewed by Author
on
July 29, 2018
Rating:
No comments:
Post a Comment