இலங்கையின் திரைப்படம் முதல் முறையாக ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை -
முதல் முறையாக இலங்கை சிங்கள திரைப்படம் ஒன்று ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனுருத்த ஜயசிங்க இயக்கியுள்ள “ கின்னேன் உபன் சீத்தல” (நெருப்பில் பிறந்த குளிர்) என்ற திரைப்படமே சிறந்த திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீரவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரோஹன விஜேவீர பாத்திரத்தில் பிரபல சிங்கள திரைப்பட நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி நடித்துள்ளார். இதற்கு முன்னர் ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் உப பிரிவுக்கு இரண்டு சிங்கள திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
எனினும் சிங்கள திரைப்படம் ஒன்று சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
இலங்கையின் திரைப்படம் முதல் முறையாக ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை -
Reviewed by Author
on
July 06, 2018
Rating:

No comments:
Post a Comment