மன்னார் பொது வைத்தியசாலை உள்ளக கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது -
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ விடுதி, வைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதி மற்றும் அமுதம் ஆரோக்கிய உணவகம் ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் பின் தங்கிய நிலையிலே காணப்படுவதாக முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் ஒத்துக்கொண்டிருந்தார். மத்திய சுகாதார அமைச்சர் ஒத்துக்கொண்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் பாரிய அபிவிருத்தி திட்டத்திற்கு வடமாகாண வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விடுபட்டுள்ளது.
பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,நியாயம் நீதிக்கு அப்பால் குறித்த அபிவிருத்தி திட்டம் எம் கைகளை விட்டு நலுவிச் சென்றுள்ளது.
ஆனாலும் நாங்கள் தொடர்ந்தும் வேறு நாடுகளிடம் நிதி உதவிகளைப்பெற்று உள்ளக கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதற்கட்டமாக ஒஸ்தியா நாட்டினுடைய கடன் உதவியைப் பெற்று நெதர்லாந்து நாட்டின் திட்டத்திற்கு சமனான திட்டங்களை மேற்கொள்ள ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தையினை நடத்தி முடித்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலை உள்ளக கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது -
Reviewed by Author
on
July 06, 2018
Rating:

No comments:
Post a Comment