மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நீண்ட நாட்களுக்கு பிறகு கடமையை பொறுப்பேற்றார்-படங்கள்
மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபர் கே.அன்ரன் மோகன்ராஜ் இன்று 06-07-2018 தனது கடமையை பொறுப்பேற்று கொண்டார்.
மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபரை இன்று காலை பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பணியாளர்கள் இணைந்து வரவேற்றுள்ளனர்.
சர்வ மத வழிபாடுகளை தொடர்ந்து புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை பெறுப்பேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டமுன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் புதிய அரசாங்க அதிபர் வரவேற்கப்பட்டிருந்தார்.
தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து முன்னாள் அரசாங்க அதிபர் உரையாற்றியிருந்ததன் பின் புதிய அரசாங்க அதிபர் கே.அன்ரன் மோகன்ராஜ் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.
இதன் போது முன்னாள் அரசாங்க அதிபருடன் மன்னார் மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் திரு.S.குணபாலன் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள், புதிய அரசாங்க அதிபரின் உறவினர்கள் முன்பு பணியாற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நீண்ட நாட்களுக்கு பிறகு கடமையை பொறுப்பேற்றார்-படங்கள்
Reviewed by Author
on
July 06, 2018
Rating:

No comments:
Post a Comment