திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பாகுபலி படத்தில் பிரபாஸின் நடிப்பு எவ்வளவு பேருக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு படத்தில் வில்லனாக நடித்த ’காளகேயா’ பிரபாகரின் நடிப்பும் பிடிக்கும்.
அந்த அளவிற்கு அவரது தோற்றமும் அவர் உச்சரிக்கும் நிம்ட்டா...கோஜ்ராஸ்....தெல்மீ...அர்தா போஸ்....கிராக்வினா....பூம்ளே... என்ற வசனமும் பயங்கரமாக பேசப்பட்டது. இவர் ராஜமௌலி இயக்க இருக்கும் பாகுபலியின் முந்தைய கதையில் இருப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படத்தில் இருக்கிறார்.
2வது கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு மனைவியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இயக்குனர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபுதேவா என்றாலே நடனம் தான் என்றாலும் இப்படத்தில் சண்டைக்காட்சிகளுக்கே முக்கியத்துவம் உள்ளதாம்.
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
Reviewed by Author
on
July 07, 2018
Rating:

No comments:
Post a Comment