மன்-சித்திவிநாயகர் இந்து தேசியகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக.... படங்கள்
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசியக்கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
17-07-2018 அன்று பாடசாலை நாவலர் மண்டபத்தில் மதியம் 2- 30 மணிக்கு கல்லூரி முதல்வர் T.தனேஸ்வரன் அவர்கள் தலைமையில் விருந்தினர்கள் வாத்திய இசைமுழங்க அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
விருந்தினர்களாக
திரு.சி.ஏ.மோகன்ராஸ் அரசாங்க அதிபர் மன்னார் மாவட்டம்
திரு.சண்முகலிங்கம் முகாமையாளர் ஆங்கில வளநிலையம்
திரு.ஞா.அன்ரனி டேவிட்சன் முதல்வர்-நகரசபை மன்னார்
இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் வலைய கல்வியதிகாரிகள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கல்ந்து சிறப்பித்தனர்.
2016- 2017 ,இரண்டு வருடத்தில் மாணவமாணவிகளால் வெளிப்படுத்தப்பட் திறமையினை எடுத்துக்கூறிய கல்லூரி முதல்வர் T.தனேஸ்வரன் அவர்கள் க.பொ.சாதாரண தரம்
க.பொ.உயர்தரம்
புலைமைப்பரீட்சை மற்றும் பல்கலைக்கழகம் தெரிவானவர்கள் என அனைவருக்கும் பாராட்டி சான்றிதழ்களும் பதக்கமும் நினைவுச்சினனங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறுவர்களும் உரிமையும் சிறப்புரையும் இடம்பெற்றது.
அத்துடன் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கும் நினைவுச்சின்னங்கள் கல்லூரிமுதல்வர் மற்றும் பிரதி அதிபர் உப அதிபர் அவர்களால் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாறான பாராட்டுச்செயற்பாடுகள் மாணவர்களின் கல்வி மற்றும் இதரசெயற்பாடுகளை ஊக்கப்படுத்தி எதிர்காலசவால்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் ஆற்றுப்படுத்தும் செயற்பாடாகும்.
-வை.கஜேந்திரன்-

மன்-சித்திவிநாயகர் இந்து தேசியகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக.... படங்கள்
Reviewed by Author
on
July 18, 2018
Rating:

No comments:
Post a Comment