கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு!
நடிகர் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கிலும் கார்த்திக்கு அதிக ரசிகர்கள் உள்ள நிலையில் ஒரே நேரத்தில் படம் அங்கும் வெளியானது. அந்த படத்தை பார்த்த துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு ட்விட்டரில் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
"சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு!
Reviewed by Author
on
July 17, 2018
Rating:

No comments:
Post a Comment