பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள்! பெருந்தொகை ஆபாச காட்சிகள் மீட்பு -
உயர்தரத்தில் கற்கும் மாணவியை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்து, இன்னுமொரு ஆசிரியருக்கு மாணவியை பகிர்ந்து கொண்ட ஆசிரியர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரிவு பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளன.
வரலாறு பாடம் கற்பதற்காக மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியே, இந்த ஆசிரியர்களிடம் சிக்கியுள்ளார்.
வரலாறு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் குறித்த மாணவியை 5 வருடங்களின் பின்னர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார். அதனடிப்படையில் மாணவியை பல முறை ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த ஆசிரியர் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகம் செய்த பின்னர் தொழில்நுட்ப ஆசிரியரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர்கள் இருவரும் இணைந்து தங்கள் மேலதிக வகுப்பிற்கு வரும் பெருமளவு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக வகுப்புக்கு செல்லும் பெண் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதீத அக்கறையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள்! பெருந்தொகை ஆபாச காட்சிகள் மீட்பு -
Reviewed by Author
on
July 27, 2018
Rating:
Reviewed by Author
on
July 27, 2018
Rating:




No comments:
Post a Comment