அண்மைய செய்திகள்

recent
-

உலக மக்களை தனது விழியால் மயக்கிய அழகி - 3 ஆண்களுடன் திருமணம்... 36 வயதில் மரணம்.


1950 களில் தன் வாள் விழிகளால் உலக மக்களை கிறங்கடித்த மெர்லின் மன்றோவின் நினைவு தினம் இன்று.
கோடி மக்களின் மனதில் ராணியாக வாழ்ந்த மெர்லினை இளமை காலத்தில் வறுமையின் கொடுமை விடாமல் துரத்த நிர்வாணப்படங்களுக்கு போஸ் கொடுத்து மொடல் பணியை தொடர்ந்தார்.

மெர்லின் மன்ரோவின் தாயும் அழகாக இருந்தவர்தான். ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மனநல காப்பகத்தில் வசித்து வந்தார்.
மெர்லினின் தந்தை யார் என்பது அவர் இந்த உலகத்தை விட்டு சென்றபின்னர்தான் அனைவருக்கும் தெரியவந்தது. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, ஏழ்மையில் மெர்லின் வாழ்க்கை கழிந்தது.
அனாதை இல்லத்தில் தனது வாழ்க்கை கழித்த மெர்லின் மன்றோ, உலக மக்களின் கனவுக்கன்னியாக திகழ்வார் என்று அவர் கனவு கூட கண்டிருக்கமாட்டார்.

அந்த அளவுக்கு ஹாலிவுட் உலகில் அவர் கோலோச்சினார். 16-வது வயதில், புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கும் மொடல் அழகியாகப் பணிபுரிந்தார்.
அப்போது அவர், பிறந்த கோலத்தில் தோன்றிய சில படங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கின.
அந்தப் படங்களின் மூலமாக அவர் திரை உலகில் நுழைந்தார். இவரது அழகுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. தனது வாள் விழியால் பல இளம் நெஞ்சங்களை வீழ்த்தியவர் மெர்லின்.
லைஃப் பத்திரிகையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் எட் கிளார்க் என்பவர் மெர்லின் மன்றோவை புகைப்படம் எடுத்து லைஃப் பத்திரிகைக்கு அனுப்பியுள்ளார்.

மெர்லினின் புகைப்படத்தைப் பார்த்த லைஃப் பத்திரிகை, ''who the hell is Marilyn Monroe?'' என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். ஆனால், பின் நாளில் சிறந்த, எண்ணிப்பார்க்க முடியாத ஸ்டாராக திகழ்ந்தார்.
ஹாலிவுட், ஒரு பெண்ணின் முகத்திற்கு 50000 டொலர்களும்...அவள் அகத்திற்கு வெறும் 50 சென்ட்டும் தரக்கூடியது என்று இவர் அன்றே உள்ளதை கூறி, ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்கவைத்தார்.
இதற்கெல்லாம் மேல், பிளேபாய் பத்திரிகையின் ஆசிரியரான ஹக் யஹஃப்னர், மெர்லின் மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகில் தனக்காக கல்லறைக்கு இடம் வாங்கினார்.
ஹாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்த இவர் தனது தாயை போலவே மனநலம் பாதிக்கப்பட்டார். மாத்திரைகள் இல்லாமல் இவரால் வாழவே முடியாது என்கிற நிலைமைக்கு ஆளானார்.
மூன்று திருமணங்கள், ஜான் எஃப் கென்னடியுடனான கிசுகிசுப்புகள், முப்பத்தாறு வயதிலேயே மரணம். மெர்லினின் மரணமும் கூட மர்மமானது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலரும், போதை மாத்திரையை அதிகம் பயன்படுத்தியதால் இறந்தார் என்றும் இன்று வரை சர்ச்சை நீண்டு கொண்டிருக்கிறது.

உலக மக்களை தனது விழியால் மயக்கிய அழகி - 3 ஆண்களுடன் திருமணம்... 36 வயதில் மரணம். Reviewed by Author on August 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.