அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதியின் சம்பளம் எவ்வளவு ....பகிரங்கமாக வெளிப்படுத்திய மைத்திரி -


இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சம்பள பட்டியலை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் பெருந்தொகையால் அதிகரிக்கப்படுவதை ஜனாதிபதி மறுத்திருந்தார்.
அவர்களுக்கான சம்பளத்தில் ஒரு சதமேனும் அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என கூறிய ஜனாதிபதி, தனது மாதாந்த சம்பளம் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியான தனக்கு மாதாந்த சம்பளமாக 95000 ரூபா மாத்திரம் கிடைப்பதாகவும், வேறு எவ்வித கொடுப்பனவுகளும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி அவர் கூறியுள்ளார்.
தான் பெற்றுக் கொள்ளும் சம்பளத்தை விட 4 மடங்கு அதிகமாக நாடாளுமன்றம் உறுப்பினர்கள் சம்பளம் பெறுகின்றனர்.
கடந்த வருடம் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட போதிலும், தனக்கான அதிகரிப்பை தான் நிராகரித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாார்.
ஜனாதிபதியின் சம்பளம் எவ்வளவு ....பகிரங்கமாக வெளிப்படுத்திய மைத்திரி - Reviewed by Author on August 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.