ஆறு பந்துகளில் 30 ஓட்டங்கள் குவித்து தெறிக்க விட்ட பொலார்ட்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் வாழ்வா சாவா ஆட்டம் ஒன்றில் செயிண்ட் லூயிஸ் அணித்தலைவர் பொலார்ட் ஒரு ஓவரில் 30 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 140 ஓட்டங்கள் குவித்தது. எளிதாக வெற்றி பெறலாம் என களமிறங்கிய செயிண்ட் லூஸியா ஸ்டார்ஸ் அணிக்கு துவக்கமே பேரிடியாக அமைந்தது. கடைசியில் 3 ஓவர்களில் 31 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அணித்த லைவர் பொலார்ட் களமிறங்கினார்.
தேவேந்திர பிஷு வீசிய 18-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்ட பொலார்ட் 3 பவுண்டரிகளையும் அள்ளினார்.
18 பந்தில் 41 ஓட்டங்கள் குவித்த பொலார்டும், அவருக்கு உறுதுணையாக நின்ற ஆந்த்ரே பிளெச்சரும் செயிண்ட் லூஸியா ஸ்டார்ஸ் அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.
ஆறு பந்துகளில் 30 ஓட்டங்கள் குவித்து தெறிக்க விட்ட பொலார்ட்
Reviewed by Author
on
August 26, 2018
Rating:
Reviewed by Author
on
August 26, 2018
Rating:


No comments:
Post a Comment