அண்மைய செய்திகள்

recent
-

5 காய்கறிகள் நீங்கள் உண்ணும் உணவில் இருக்கிறதா....


நம் உண்ணும் உணவில் தினமும் ஊட்டச்சத்தும் உடலுக்கு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதால் ஆரோக்கியத்துடனும் உடலில் எவ்வித நோயின்றியும் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம்.

பச்சை இலை கொண்ட காய்கறிகளில் இருக்கும் குளோரோபில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை படைத்தவை. அதனால் கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
பூசணிக்காய்
நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது.பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
பாகற்காய்
சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் உதவுகிறது. சிறந்த கோடை காய்கறியான பாகற்காய் , ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யை தருகிறது. வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன.
புடலங்காய்
எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
பீர்க்கங்காய்
இரத்தம் சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது. தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.
சுரைக்காய்
ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி.உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.
5 காய்கறிகள் நீங்கள் உண்ணும் உணவில் இருக்கிறதா.... Reviewed by Author on August 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.