அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்தப்படும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு -


வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பினை சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

தனது 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்றைய தினம் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தினையும், புனரமைக்கப்படுகின்ற வரலாற்று சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக் கேணியையும் ஆளுநர் பார்வையிட்டுள்ளார்.

மாமாங்கேஸ்வரர் ஆலயம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து பாதையாகவுள்ள மாமாங்க ஆலய வீதி காபட் இடப்பட்டு இதன்போது ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண உதவி நிதி திட்டத்தின் கீழ் 20 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த வீதி புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

வீதி திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினரால் விக்னேஸ்வரா திருத்தொண்டர் மடத்தில் ஆளுநரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்தப்படும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு - Reviewed by Author on August 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.