முல்லைத்தீவில் தமிழர்களின் உடமைகளுக்கு தீவைப்பு! ஜனாதிபதி மைத்திரி எடுத்துள்ள நடவடிக்கை -
முல்லைத்தீவு, நாயாறு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார். முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் நேற்று தீக்கிரையாக்கப்பட்டது.
மீனவர்களின் பெறுமதியான 3 படகுகள், பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள், 8 வாடிகள் மற்றும 2 இஞ்சின்கள் உள்ளிட்ட தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இருந்தது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவில் தமிழர்களின் உடமைகளுக்கு தீவைப்பு! ஜனாதிபதி மைத்திரி எடுத்துள்ள நடவடிக்கை -
Reviewed by Author
on
August 15, 2018
Rating:

No comments:
Post a Comment