முசலியில் பொது மக்கள் பாவனைக்காக பாலம் திறந்து விடப்பட்டுள்ளது-(படம்)
முசலியில் நிர்மானிக்கப்பட்ட மரிச்சுக்கட்டி பிரதான பெரிய பாலம் இன்று புதன்கிழமை 08-08-2018 காலை மக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.
கடந்த 2016ம்ஆண்டு உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விஷேட திட்டங்கள் முகாமைத்துவப் பிரிவும் இணைந்து ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன முகவர் உதவியுடன்
தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பிலுள்ள பாரிய பாலங்கள் நிர்மானிப்பதற்கான கருத்துத் திட்டம் ஒப்பந்தப் பிரிவு இரண்டின் கீழ் முசலிப்பிரதேசத்தில் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது.
இந்த நிலையில் முசலி மரிச்சுக்கட்டி பிரதான பெரிய பாலம் நிர்மானப் பணிகள் பூர்த்தியாகி நிலையில் 08-08-2018 இன்றைய தினம் சாதாரணமாக திறந்துவிடப்பட்டுள்ளது
இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் 2016 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2018 ஜீலை இறுதியில் நிறைவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முசலியில் பொது மக்கள் பாவனைக்காக பாலம் திறந்து விடப்பட்டுள்ளது-(படம்)
Reviewed by Author
on
August 09, 2018
Rating:

No comments:
Post a Comment