முல்லைதீவில் கடும் வறட்சி! 14000 குடும்பங்கள் வரை பாதிப்பு -
இந்த வறட்சி நீடிக்குமாக இருந்தால் விவாசாயிகளின் வாழ்வாதார பயிர்ச்செய்கைகள் மேலும் பதிக்கப்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவில் நிலவும் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட 8103 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதோடு 6824 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 7296 விவசாயிகளுக்கு உலருணவு வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வறட்சி நிலை தொடருமாக இருந்தால் குடிநீர் விநியோக செயற்றிட்டம் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, விவாசாயிகளின் பயிர்ச்செய்கைகளும் அதிகம் பாதிக்கப்படும்.
குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 390 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 3129 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 222 குடும்பங்களுக்கும், ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1895 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1996 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 471 குடும்பங்களுக்குமாக மொத்தமாக 8103 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகத்தினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியின் ஊடாக விநியோகித்து வருகிறோம்.
இருப்பினும் இதுவரை குடிநீர் விநியோகத்துக்கான நீரினை பெறுவதில் பிரச்சனைகள் இல்லாத போதும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பிரதேச செயலாளர் பிரதேச சபையினர் தகவல் படி குடிநீர் விநியோகத்துக்கான குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு, நீர் வற்றி காணப்படும் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
தொடர்ந்தும் இதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிற்கு தெரிவித்திருக்கிறோம். அத்தோடு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் (உலருணவு) வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 14,999 குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளனர். அதில் முதல் கட்டமாக 6824 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 7296 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் செய்துள்ளோம்.
வறட்சி தொடருமாக இருந்தால் மேலும் குடிநீர் விநியோக செயற்றிட்டம் நீடிக்க வேண்டிய நிலை ஏற்ப்படுவதோடு, பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முல்லைதீவில் கடும் வறட்சி! 14000 குடும்பங்கள் வரை பாதிப்பு -
Reviewed by Author
on
September 18, 2018
Rating:
Reviewed by Author
on
September 18, 2018
Rating:


No comments:
Post a Comment