எல்லோரும் எதிர்பார்த்த இந்தியன் 2 படத்தின் கதை இதுதானாம்!
இந்தியன் எல்லோரையும் மிகவும் கவர்ந்த ஒரு படம். சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடப்பில் 1996 ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அரசியல் ஊழல்களில் சிக்கியவர்களை அப்போதே கமல் வெளுத்து வாங்கியிருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.
கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இதில் தீவிரமாக இறங்கவுள்ளாராம். இந்நிலையில் படத்தின் கதை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்த கமலின் கதாபாத்திரம் அப்படியே தொடர்கிறதாம்.
முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக நினைக்கையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று போன் செய்வதாக கதை முடியும். ஆனால் இந்தியன் 2 ல் வெளிநாட்டிலிருந்து திரும்பும் அப்பா கமல் மீண்டும் இங்குள்ள ஊழல் பேர்வழிகளை தன் வர்ம கலையால் புரட்டி எடுப்பாராம்.
மேலும் இதில் அப்பாவை மிகவும் வயதான தோற்றத்திற்கு மாற்றவுள்ளார்களாம். அதற்கு அவருக்கு ஹாலிவுட்டில் இருந்த ஸ்பெஷல் மேக்கப் கலைஞர்களை பயன்படுத்தவுள்ளார்களாம்.
அத்துடன் இந்த பாகத்தில் முன்பு போல இல்லாமல் மகன் கமல்ஹாசனும் ஊழலுக்கு எதிராக போராடுவாராம்.
எல்லோரும் எதிர்பார்த்த இந்தியன் 2 படத்தின் கதை இதுதானாம்! 
 
        Reviewed by Author
        on 
        
September 02, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 02, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment