ரயில் முன் பாய்ந்து தந்தை மற்றும் இரு மகன்கள் தற்கொலை! -
பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் தந்தையொருவர் தனது பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த அனைவரும், வெலிகந்த – போவத்தை பகுதியிலேயே ரயில் முன்னால் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதான நபரும், அவரது 11 மற்றும் 5 வயதான மகன்களுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் மூத்த மகன் கொழும்பில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் முன் பாய்ந்து தந்தை மற்றும் இரு மகன்கள் தற்கொலை! -
Reviewed by Author
on
September 11, 2018
Rating:

No comments:
Post a Comment