கிழக்கில் மதம் மாற்ற மிரட்டல்கள்ambarai-வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை! (வெளிவந்தன புதிய ஆதாரங்கள்)
அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
குறித்த செய்தியானது கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மதமாற்றம் குறித்த உண்மைகளையும் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதன் உண்மை தன்மையையும் உலகிற்கு எடுத்து காட்டும்படியாக அமைந்திருந்தது.
இலங்கையின் பல ஊடகங்களும் அந்த சமூக விரோதச் செயலை கண்டித்துச் செய்தி வெளியிட்டதுடன், மதத்தின் பெயரால் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இதுபோன்ற காரியங்களை தடுக்கும் பொறுப்பு தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையை வேண்டிநிற்கும் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் கோரிக்கைவிடுத்திருந்தன.
இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, நாங்கள் தமிழர்களை வற்புறுத்தி மதம் மாற்றவில்லை அவர்களாகவே விரும்பி மதம் மாறியுள்ளார்கள் என்று கூறிச் செய்தி வெளியிட்ட ஒரு மதம் பரப்பும் ஊடகம், அந்த சமூகவிரோத நடவடிக்கை தொடர்பாக ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிட்ட செய்தியையும் பொய்யாக்க முயன்றிருந்தது.
கிழக்கை பொறுத்தமட்டில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இஸ்லாமிய மயமாக்கல் மிகவும் திட்டமிட்ட முறையில், அரவு நாடுகளில் உதவியுடன் அபிவிருத்தி என்ற போர்வையில் நடைபெறுவதான குற்றச்சாட்டு பரவலாகவே கிழக்கில் சுமத்தப்பட்டு வருகின்றது.
பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் வாழ்ந்ததாக கூறப்படுகின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஒரு இனமுறுகளை ஏற்படுத்தும் ஒரு மோசமான நிலைக்கு இதுபோன்ற சம்பவங்கள் இட்டுச்சென்றுவிடுமோ என்று அச்சப்படவேணடி இருக்கின்றது.
இப்படியான நிலையில்தான் அம்பாறை வளத்தாப்பட்டி பிரதேசத்தில் சுனாமியின் பின்பு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு இடமான இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இன்றைய நிலை!
குறிப்பிட்ட தமிழ் இளைஞரின் வீடு மற்றும் ஆட்டோ எரிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்கள் இரவு நித்திரையில் இருந்த போது எரித்துள்ளார்கள். அவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் அவர்களும் தீயில் எரிந்து இருப்பார்கள். அவர்கள் நாளாந்தம் வருமானம் தேடிய முச்சக்கர வண்டியும் எரிக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுத்து. அவர்கள் தங்கியிருந்த வீட்டை எரித்தவர்கள் யார் என்பதை வெளியில் கொண்டுவராது, அந்த சம்பவத்திற்கான காரணத்தை தேடாது, முற்று முழுதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை இழிவு படுத்தும் வேலையை ஊடகம் என்ற போர்வையில் மதம் பரப்பும் ஒரு ஊடகம் செய்துள்ளதானது, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறும் என்பதையும், அப்படி நடைபெறும் சம்பவங்களுக்கான நீதி கிடைக்காது என்பதையும் மறுபடியும் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.
சிறிலங்கா காவல்துறையிடம் இதுதொடர்பான முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காகன கண்ணால் கண்ட சாட்சி இருந்துள்ளபோதிலும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறலாம் என்ற அச்சததை தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்த pஉள்ளது.
தற்போது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாளாந்தம் வருமானம் ஈட்டி வந்த முச்சக்கர வண்டி எரியூட்டப்பட்டதால் அவர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். தற்போது அவர்கள் போரதீவு என்னும் இடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்!
குறித்த குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்ததுடன். அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
புலம்பெயர் உறவுகளுக்கான வேண்டுகோள்!
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தன்னுடைய நாளாந்த வருமானத்திற்காக இருந்த முச்சக்கர வண்டியையும் இழந்து இருப்பிடம் இல்லாது தவித்து வருகின்றனர். எனவே இவர்களது நாளாந்த வருமானத்திற்கான உதவிகளை செய்ய முன்வருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஊதவி செய்ய விரும்பும் உறவுகள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்- சோதிநாதன் சந்திரசேகர் 0094773507156
IBC-TAMIL
கிழக்கில் மதம் மாற்ற மிரட்டல்கள்ambarai-வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை! (வெளிவந்தன புதிய ஆதாரங்கள்)
Reviewed by Author
on
September 14, 2018
Rating:

No comments:
Post a Comment