பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி
அமெரிக்காவில் தமது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிருந்தபடியே கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு உதவ முன்வந்துள்ளார்.
கேரளாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு என்னால் இயன்ற சிறு நிதியுதவி என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னர் கேரள பெருவெள்ளம் தொடர்பில் தகவல் வெளியான போது, அமெரிக்க மண்ணில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்டிருந்த ரஹ்மான் கேரள மக்களுக்காக பாடல் ஒன்றை பாடியது இணையத்தில் பலரது கபனத்தையும் ஈர்த்தது.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி
Reviewed by Author
on
September 03, 2018
Rating:
No comments:
Post a Comment