ஒரு மூலிகையை மட்டும் பயன்படுத்துங்கள்: கிடைக்கும் அற்புத நன்மைகள்!
பெரும்பாலும் கொத்தமல்லியை நாம் அலங்கரிக்கவும், வாசனைக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் கொத்தமல்லியில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
வீக்கத்தை குறைத்தல்
கொத்தமல்லியில் சியானால் மற்றும் லினோயிக் ஆகிய அமிலங்கள், சருமத்தில் ஏற்படும் விக்கங்களை குறைக்க பயன்படுகின்றன. மேலும், உடலில் உள்ள தேவையில்லாத நீரை வெளியேற்றவும் உதவி செய்கிறது.சருமபொலிவு
சருமத்தில் ஏற்படக்கூடிய வெடிப்புகள், வறட்சி ஆகியவற்றை சரிசெய்யும் கிருமி நாசினிகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆகியவை கொத்தமல்லியில் உள்ளன. எனவே, கொத்தமல்லியைப் பயன்படுத்தி இவற்றை சரி செய்யலாம்.கொழுப்பை குறைத்தல்
ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க லினோயிக், ஒழிக்க, ஸ்டீரியிக் மற்றும் அஸ்கார்பிக் போன்ற அமிலங்கள் தேவை. இவை கொத்தமல்லியில் அதிகளவில் உள்ளதால் இதனை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கலாம்.மேலும், தமனிகள் மற்றும் நரம்புகளின் உள் சுவர்களில் சேர்ந்திருக்கும் எல்.டி.எல் கொழுப்பின் அளவையும் கொத்தமல்லி குறைப்பதுடன், மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. அத்துடன் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளையும் கொத்தமல்லி தருகிறது.
வயிற்றுப்போக்கு
கொத்தமல்லியில் உள்ள போர்னியால் மற்றும் லினாலோல் ஆகியவை வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவை கல்லீரலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி வாந்தி, குமட்டல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும்.ரத்த அழுத்தத்தை சீராக்குதல்
ரத்த அழுத்தத்தை குறைக்க கொத்தமல்லியை உட்கொள்ள வேண்டும். இது கால்சியம் அயனிகள் மற்றும் அசிடைல்கொலைன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை அதிகரிக்கும். இதனால் நரம்பியல் மண்டலம் வலுவடையும்.வாய்ப்புண்
வாய்ப்புண் மற்றும் குடல்புண்ணை சரிசெய்ய கொத்தமல்லி அருமருந்தாகும். கொத்தமல்லியில் உள்ள சிட்ரோனெல்லோல் அடிப்படையில் ஒரு ஆண்டிசெப்டிக் ஆகும். இதில் உள்ள மற்ற மூலக்கூறுகள் இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரிசெய்யும்.அத்துடன் வாய் துர்நாற்றத்தையும் இது தடுக்கும். இதற்காகவே பெரும்பாலான பற்பசைகளில் கொத்தமல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எலும்பு ஆரோக்கியம்
கால்சியம் சத்துக்கள் கொத்தமல்லியில் உள்ளதால், எலும்புகளை பலப்படுத்த இது பெரிதும் உதவும். அத்துடன் அஸ்டோபோரோசிஸ் ஏற்படுவதையும் கொத்தமல்லி தடுக்கும். எனவே உணவுகளில் சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.கண் ஆரோக்கியம்
கொத்தமல்லியில் உள்ள கனிமப் பொருட்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் மற்றும் பாஸ்பரஸ் பார்வைக் கோளாறுகளை தடுக்க உதவுகின்றன. மேலும் இவை கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், கண்களில் ஏற்படும் வலியையும் குறைக்கின்றன.கொத்தமல்லி இலைகளில் உள்ள பீட்டா கரோட்டின், பல கண் நோய்களை தடுப்பதுடன் இழந்த கண் ஆரோக்கியத்தையும் மீட்டு தரும்.
சர்க்கரை நோய்
இன்சுலின் அளவை அதிகரிக்கும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. இதன்மூலம் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக கொத்தமல்லி உள்ளது. அத்துடன் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.ஆண்மைக்குறைவு
கொத்தமல்லியில் உள்ள எண்ணற்ற மூலக்கூறுகள் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும். எனவே இதனை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது தேநீர் தயாரித்தும் பருகலாம். மேலும் தேநீரை தொடர்ந்து பருகினால் நரம்புகள் புத்துணர்ச்சி அடைவதுடன், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.
ஒரு மூலிகையை மட்டும் பயன்படுத்துங்கள்: கிடைக்கும் அற்புத நன்மைகள்!
Reviewed by Author
on
September 03, 2018
Rating:
No comments:
Post a Comment