பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ் வீடு: எத்தனை மில்லியன் மதிப்பு தெரியுமா....
உடோபியா என்றால் அது ஒர் கற்பனையான அற்புத உலகத்தைக் குறிக்கிறது. அதுபோல ஸாநாடு என்பது பெரும் கம்பீரமும் அழகும் அமைந்த ஒரு கற்பனைப் பகுதியைக் குறிக்கிறது. அந்தக் கற்பனைப் பகுதியைத்தான் நிஜமாக்கித் தன் வீட்டுக்குப் பெயராகவும் வைத்திருக்கிறார் பில் கேட்ஸ்.
பில் கேட்ஸ் ஏழு வருடங்கள் செலவழித்து வாஷிங்டன் ஏரிக்கு எதிராகத் தனது இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்.
மெடினா என்ற இடத்தில் உள்ளது பில் கேட்ஸின் வீடு. 66,000 சதுர அடி பரப்பளவில் அமைந்த மாளிகை. வெளியிலிருந்து பார்த்தால் வீடு முழுவதுமாகத் தெரியாது. காரணம் பல மரங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. 2,500 சதுர அடியில் ஒரு ஜிம் உண்டு. உணவு அறையின் பரப்பளவு 1,000 சதுர அடி.
7 படுக்கையறைகள், 24க்கும் அதிகமான குளியலறைகள் கொண்ட வீடு இது. அவற்றில் பத்தில் குளியலறைத் தொட்டிகள் உண்டு. வரவேற்பு அறையில் 200 பேர் வரை உட்காரலாம். 22 அடி வீடியோ திரை ஒன்று அதன் ஒரு சுவரில் பொருத்தப்பட்டிருக்கிறது.
அறைகளில் உள்ள வெப்ப நிலை ஒரு உயர்தர சென்ஸார் அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 60 அடி நீளம் கொண்ட நீச்சல் குளம். நீருக்குள்ளேயே மியூசிக் சிஸ்டம் உண்டு. இந்த நீச்சல் குளத்தில் கண்ணாடிச் சுவர் ஒன்று இருக்கிறது. அதற்குக் கீழே நீச்சலடிக்கச் சென்றால் மேல் மாடியை அடைந்து விடலாம்.
கீழ்த்தளத்தில் கார்களை நிறுத்தப் பல இடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றில் 10 கார்களை நிறுத்தலாம். கான்க்ரீட், எவர்சில்வர் ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்டிருக்கிறது இந்தப் பகுதி மட்டும் வெகு ரகசியமானதாம்.
இந்த வீட்டின் மதிப்பு 123 மில்லியன் டொலர் ஆகும்.
நூலகத்தில் நிறைய புத்தகங்கள் உண்டு. இதில் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்ஸி வரைந்த ஒரு ஓவியத்தை 30.8 மில்லியன் டொலர் விலை கொடுத்து வாங்கி மாட்டியிருக்கிறார் பில் கேட்ஸ்
பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ் வீடு: எத்தனை மில்லியன் மதிப்பு தெரியுமா....
Reviewed by Author
on
September 03, 2018
Rating:
No comments:
Post a Comment