பெண் மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்த மதுரை முத்து டாக்டரானார்!
தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் பரிட்சயமானவர் மதுரை முத்து. காமெடி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட்அப் காமெடி மூலம் மிகவும் பிரபலமானார்.
பிரபல தொலைக்காட்சியில் இன்றும் நிகழ்ச்சி செய்து வருகிறார். சில வருடத்திற்கு முன்பு அவரது மனைவி விபத்தில் இறந்துபோனார்.இதனையடுத்து இவர் பெண் மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
இவருக்கு சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர்.
13 ஆண்டுகள் உழைப்புக்கும், களைப்புக்கும் கிடைத்த பட்டம்.. நன்றி நண்பர்களே என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு ஒரு ரசிகர், ஒரு குடும்பத்தில் இரண்டு டாக்டர்கள்...ஒருவர் "பற்களுக்கு"...இன்னொருவர் நல்ல " சொற்களுக்கு"...வாழ்த்துக்கள் அண்ணா... என்று வாழ்த்தியுள்ளார்.
பெண் மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்த மதுரை முத்து டாக்டரானார்!
Reviewed by Author
on
September 03, 2018
Rating:

No comments:
Post a Comment