மன்னாரில் மாபெரும் ஹஜ் விழா சிறப்பாக இடம்பெற்றது...படங்கள்
மன்னாரில் மாபெரும் ஹஜ் விழா சிறப்பாகஇடம்பெற்றது
உப்புக்குளம் முன்னால் உதைபந்தாட்ட வீரர்கள் அமைப்பினரின்-USMA-ஏற்பாட்டில் உப்புக்குளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்னரின் ஒழுங்கமைப்பில்ஹஜ் பெருநாளை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் விழாவானது இம்முறையும் 02-08-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-30 மணியளவில் 04வது தடவையாக அல் பதாஹ் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஜனாப்.N.M.உஸைன் தலைமையில்
பிரதமவிருந்தினராக
கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிர ஸ்தேசிய தலைவர்
கௌரவ அதிதிகளாக
A.C.M.C-அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர் அதிகாரிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் இவர்களுடன் விழா ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளாக
விருந்தினர் வரவேற்பு-மன் அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையின் வாத்தியைசைக்குழு வழங்க வரவேற்புரையினை ஜனாப்.M.Y.கனூன் ஆசிரியர் வழங்கவும்சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி
அல் பதாஹ் வி-க---கிறீன் பீல்ட் வி-க நடைபெற்றதுடன்
மாணவ மணவர்களுக்கான பலவகையான போட்டிகளும் கயிறுத்தல் பலூன் உடைத்தல் சாக்கோட்டம் போன்றபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் விருந்தினர்களாலும் கிறிக்கெட் உதை பந்து மென்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மணவர்களுக்கான வெற்றிக்கிணங்கள் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்படனர்.
பிரதமவிருந்தினர் உரையில் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் நாம் இன மத மொழி பேதமின்றி எமது மன்னார் மண்ணின் அபிவிருத்தியில் அக்கறையுடன் செயலாற்ற வேண்டும். கடந்து வந்த பாதையினை படிப்பினையினை நினைவில் இருத்தி ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும்.
இரவு 8-30மணியளவில் விழா நிறைவுற்றது.

மன்னாரில் மாபெரும் ஹஜ் விழா சிறப்பாக இடம்பெற்றது...படங்கள்
Reviewed by Author
on
September 03, 2018
Rating:

No comments:
Post a Comment