அண்மைய செய்திகள்

recent
-

ஆசிய கிண்ணம்: பிரபல பந்துவீச்சாளரின் சாதனையை முறியடித்த மலிங்கா! -


ஆசிய கிண்ணம் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த முரளிதரன் சாதனையை முறியடித்து வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கின்னம் தொடருக்கான போட்டிகள் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக, ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் அணிக்கு திரும்பியிருக்கும் லசித் மலிங்கா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

போட்டியில் வங்கதேச அணி வெற்றியடைந்திருந்தாலும், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தன்னுடைய பங்கை அணிக்கு செம்மையாகவே ஆற்றியுள்ளார்.
பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த 35 வயது பந்து வீச்சாளர், தற்போது அடுத்த நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு முழுத்தகுதியுடன் இருப்பதாக அறியப்பட்டுள்ளார்.

23 ரன்களை விட்டுக்கொடுத்த 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், ஆசிய கிண்ணம் தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த முரளிதரனின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 2ஒருநாள் போட்டி மற்றும் 4 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை கைப்பற்றிய மலிங்கா, ஆசிய கிண்ணம் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஆசிய கிண்ணம்: பிரபல பந்துவீச்சாளரின் சாதனையை முறியடித்த மலிங்கா! - Reviewed by Author on September 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.