ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவுக்குள் வருவதை தடுப்பதில் வெற்றி: பி.எஸ்.எப் -
மியான்மரிலிருந்து வெளியேறி பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியாக்கள் இந்தியாவுக்குள் வர முயற்சிப்பதை வெற்றிக்கரமாக தடுத்துள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) இயக்குனர் ஜெனரல் கே.கே.ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்தோரில் நேற்று நடைபெற்ற பி.எஸ்.எப். ஆயுதங்கள் மற்றும் செயல் உத்திகளின் மத்திய பள்ளி நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“8 முதல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷில் நுழைந்திருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை நாங்கள் தடுத்துள்ளோம்”
பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை இணைக்கும் 41,000 கி.மீ. எல்லைப்பகுதியை பாதுகாக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்பு படை ஈடுப்பட்டிருக்கிறது.
ரோஹிங்கியா விவகாரத்தில் இந்திய அரசு பங்களாதேஷூக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் கே.கே. ஷர்மா, “இப்பிரச்னையை பங்களாதேஷ் மிக நன்றாக கையாளுகின்றது.
சர்வதேச மட்டத்தில் மியான்மர் மீது அழுத்தம் கொடுக்க பங்களாதேஷ் முயற்சித்து வருகின்றது. அப்பொழுதே மியான்மர் தங்களுடைய குடிமக்களை (ரோஹிங்கியாக்களை) திரும்ப பெற்றுக்கொள்ளும்” என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதே சமயம், ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பான மேற்கு பங்களாதேஷின் மென்மையான நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார் எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் கே.கே.ஷர்மா.
ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவுக்குள் வருவதை தடுப்பதில் வெற்றி: பி.எஸ்.எப் -
Reviewed by Author
on
September 17, 2018
Rating:
Reviewed by Author
on
September 17, 2018
Rating:


No comments:
Post a Comment