அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தற்காலிக பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்-(படம்)


 மன்னார் நகரில் பொதுப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதால் பயணிகளுக்கான தற்காலிக பேருந்து தரிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மன்னார் எரிபொருள் நிறப்பும் நிலையத்துக்கு பின் புறமாக இருந்த பகுதியில் சனி (1) மற்றும் ஞாயிறு (2) ஆகிய இரு தினங்களும் மன்னார் நகரசபைத் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் தற்காலிக பேரூந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நகர சபை உபதலைவர் ஐன்சன் மற்றும் சக உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் நகரசபை செயலாளர் பணியளர்களின் உதவியுடன்  தற்காலிகப் பேரூந்து தரிப்பிடம் அமைத்தலுக்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியின் ஒரு பகுதி மீண்டும் நகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது இ.போ.ச பஸ்கள் புதிய இடத்தில் சேவையை ஆரம்பித்துள்ளது.

ஒரு சில  வாரத்தில் தனியார் பேரூந்துகளும் தற்காலிக இடத்தில் தமது சேவையை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை நகரசபை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் தற்காலிக பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்-(படம்) Reviewed by Author on September 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.