அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் ஆயுதங்கள்: ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம்-வெளியான அதிர்ச்சி தகவல்


சிரியாவில் கூட்டுப்படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுவிஸ் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜேரமன் பத்திரிகை ஒன்று கடந்த ஆகஸ்டு மாத துவக்கத்தில் இந்த விவகராம் தொடர்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சந்தேகம் எழுப்பியிருந்தது.

குறித்த புகைப்படத்தில் ஐ.எஸ் ஆதரவு Hayat Tahrir al-Sham பயங்கரவாத குழுவினரிடம் இருந்த ஆயுதங்கள் சந்தேகத்தை கிளப்பியது.
Hayat Tahrir al-Sham பயங்கரவாத அமைப்பானது முன்னாள் அல் கொய்தா உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
குறித்த அமைப்பினர் சிரியாவின் சர்ச்சைக்குரிய பகுதியான இத்லிப் நகரில் முற்றுகையிட்டிருந்த காலகட்டத்தில் பதிவு செய்த புகைப்படத்தை ஜேர்மன் பத்திரிகை வெளியிட்டது.

குறித்த பயங்கரவாதிகள் வசமிக்ருந்த ஆயுதங்கள் அனைத்தும் சுவிட்சர்லாத்தில் தயாரிக்கப்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஆயுதங்கள் அனைத்தும் சுவிஸ் அரசு அனுமதியுடன் கடந்த 2003 ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்திற்கு கையளித்தவையாகும்.
ஆனால் ஆயுதங்கள் மறு ஏற்றுமதி செய்வது தொடர்பில் கருத்தில் கொள்ளவேண்டிய சட்டங்களை மீறிய ஐக்கிய அமீரகம் குறிப்பிட்ட ஆயுதங்களை ஜோர்டான் நாட்டுக்கு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனிடையே கடந்த யூன் மாதம் ஆயுத ஏற்றுமதி தொடர்பில் சட்டங்களை எளிமைப்படுத்தி சுவிஸ் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் உள்நாட்டு கலவரம் நடைபெறும் நாடுகளுக்கும் சுவிஸ் ஆயுதங்களை விற்பனை செய்யலாம் என தெரியவந்துள்ளது.

சுவிஸ் ஆயுதங்கள்: ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம்-வெளியான அதிர்ச்சி தகவல் Reviewed by Author on September 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.