மோசமடையும் அரசியல் கைதிகளின் நிலைமை - சி. சிவமோகன்
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 15 நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கத்தினால் அப்பட்டமான அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அங்கு கைதிகளின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் அவர்களின் நிலைமைகளையும் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 15 நாட்களாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அவர்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தேன்.
மிகவும் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் உணவு இன்றி தண்ணீர் மற்றும் ஜீவனியை மாத்திரமே உட்கொண்டு தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மேலும் நாட்கள் செல்லுமானால் நிலைமை மேலும் மோசமடையும்.
சிறைகளிலுள்ளவர்களுக்கு ஆகக்கூடிய தண்டனை 10 வருடம், அரசாங்கமானது இழுத்தடிப்பு செய்து வருகின்றார்கள். இங்கு நடைபெறுவது அப்பட்டமான அநீதி 80முதல் 100இற்கும் இடைப்பட்ட கைதிகள் குறுகிய காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மோசமடையும் அரசியல் கைதிகளின் நிலைமை - சி. சிவமோகன்
Reviewed by Author
on
September 29, 2018
Rating:

No comments:
Post a Comment