அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம்!
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
“அமெரிக்கன் கமியூனிட்டி சர்வே” என்றழைக்கப்படும் கருத்துக்கணிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.
தற்போது அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின் படி அமெரிக்காவிலுள்ள 30.5 கோடி மக்களில், 21.8 சதவீதமான மக்கள் ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசுகிறார்கள்.
அதாவது சுமார் 6.5 கோடி மக்கள் பிரென்ச், ஜேர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை பேசுகிறார்கள். வெளிநாட்டு மொழி பேசும் 6.5 கோடி பேரில் 20.6 சதவீத மக்கள் அதாவது 8.63 இலட்சம் பேர் ஹிந்தி பேசுகிறார்கள்.
இந்திய மொழிகளில் ஹிந்தி தான் அமெரிக்காவில் அதிகம் பேசப்படுகிறது. அதற்கு அடுத்த படியாக குஜராத்தி மொழி உள்ளது. இதன் படி 4.34 இலட்சம் பேர் அமெரிக்காவில் குஜராத்தி பேசுகிறார்கள்.
தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை வேக வேகமாக அமெரிக்காவில் வளர்ந்து வருகிறது. அதன்படி 4.15 இலட்சம் பேர் தெலுங்கு பேசுகிறார்கள்.
இது 84.5 சதவீத வளர்ச்சியாகும். அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொழிகளில் தெலுங்கு தான் முதலிடம் பிடித்து இருக்கிறது.
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இந்தியாவிலிருந்து மட்டும் சென்று இருக்கும் தமிழர்களை கணக்கில் கொள்ளாது சிங்கப்பூர் மலேசியா மற்றும் இலங்கையிலிருந்து அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களை கணக்கில் கொண்டால் தமிழ் மொழி 3ம் இடத்தை பிடித்துள்ளது.
அதன் படி 4.20 இலட்சம் மக்கள் அமெரிக்காவில் தமிழ் பேசுகிறார்கள்” என அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளில் ஊடாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம்!
Reviewed by Author
on
September 22, 2018
Rating:
Reviewed by Author
on
September 22, 2018
Rating:


No comments:
Post a Comment