உலக நாடுகள் கலக்கத்தில்....ஐ.நா கூட்ட தொடரில் ட்ரம்ப் விடுத்துள்ள திடீர் அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73வது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர். “சோஷலிஸம், உலகமயமாதல் என்பன தோற்றுவிட்டன. இனி உலக நாடுகளுக்கு இலவச நன்கொடை தரமாட்டோம்.
எந்த நாட்டு பாதுகாப்பையும் பொறுப்பெடுக்கவும் மாட்டோம். அனைத்தையும், அமெரிக்க நலனை முன்நிறுத்தியே தீர்மானிப்போம். ஐக்கிய அமெரிக்காவோடு எந்தெந்த நாடுகள் மதிப்பளித்து நடக்குமோ எந்த நாடுகள் தமது நாட்டுடன் நட்பு பாராட்டி செயற்படுமோ அந்த நாடுகளுக்கு மாத்திரமே ஐக்கிய அமெரிக்கா நிதியுதவிகளை வழங்கும்.” என கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது அனைத்து நாடுகளிடத்திளும் பொருளாதார மற்றும் நிதிநெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதில் ஐக்கிய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது அடுத்தக் கட்டமாக குறித்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதனால், பல உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாக இருக்கின்றன.
இவ்வாறான நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தற்போது விடுத்துள்ள அறிவிப்பானது பல நாடுகளிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக நாடுகள் கலக்கத்தில்....ஐ.நா கூட்ட தொடரில் ட்ரம்ப் விடுத்துள்ள திடீர் அறிவிப்பு!
Reviewed by Author
on
September 26, 2018
Rating:

No comments:
Post a Comment