சிரிய ஜனாதிபதியை கொல்ல திட்டமிட்டாரா டொனால்டு டிரம்ப்? வெளியான பரபரப்பு தகவல் -
அமெரிக்க புலனாய்வு துறை பத்திரிகையாளரான பாப் வுட்வார்ட் ‘Fear: Trump in the White House' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தை கடந்த ஆண்டு டொனால்டு டிரம்ப் கொலை செய்ய திட்டமிட்டார் என்றும், அதனை அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் தடுத்துவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் பல குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என்றும், போலியானது என்றும் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வுட்வார்டின் புத்தகம் பொய் மற்றும் போலி ஆதாரங்களால் ஆனது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ஏற்கனவே இந்த புத்தகத்தை நிராகரித்துவிட்டார். அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேற்கோள்கள் அனைத்தும் மோசடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ‘இந்த புத்தகத்தில் கற்பனை கதைகளை விட அதிகமாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியை பற்றி மோசமான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, இந்த புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதியை கொல்ல திட்டமிட்டாரா டொனால்டு டிரம்ப்? வெளியான பரபரப்பு தகவல் -
Reviewed by Author
on
September 06, 2018
Rating:
No comments:
Post a Comment