பிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை! அதிர்ச்சி தகவல் -
NSEE என்ற நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை கருத்துகணிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் பத்தில் 6 குழந்தைகள் திருமணத்துக்கு முன்னதாகவோ, அல்லது திருமணம் செய்துகொள்ளாமலோ பிறந்த குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 1986 ஆம் ஆண்டில் இருந்து பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தடுக்கப்படவேண்டிய ஒன்றல்ல, இதற்கான சட்டங்கள் எதுவும் பிரான்சில் இல்லை என்பதால் திருமண வாழ்க்கை என்ற ஒன்று மெல்ல மெல்ல அழிந்து வருவது கவலைக்குரிய விடயம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிறக்கும் குழந்தைகளில் 84 வீதமான குழந்தைகள் மட்டுமே தங்கள் தந்தையுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
பிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை! அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
September 06, 2018
Rating:

No comments:
Post a Comment