அண்மைய செய்திகள்

recent
-

ரஷ்யாவில் 20 பேரை சரமாரியாக சுட்டு கொன்ற விவகாரம்:


ரஷ்யாவில் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது.

Vladislav Roslyakov என்ற 18 வயது மாணவர்தான் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர். ரஷ்யாவின் கிரிமையாவின் கெர்ச் என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் மொத்தம் 19 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவிற்கு இதுதான் தனக்கு கனவு என்று கூறப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பைன் பாடசாலையில் எரிக் ஹாரிஸ் என்ற மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

அதேபோல் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு அதேபோல் உடை அணிந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான் விளாடிஸ்லவ்.
இதுதான் கனவு என்று கூறினாலும், இவரது மனநிலை நன்றாகவே இருந்துள்ளது விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் மனநிலை சோதனை செய்த பின்தான் துப்பாக்கி வழங்குவார்கள். இவர் அந்த சோதனை எல்லாம் முடித்துவிட்டுதான் துப்பாக்கி வாங்கி உள்ளார்.
அதேபோல் கடைசியாக 19 பேரையும் சுட்டுவிட்டு அவர்களை கல்லூரி நூலகத்தில் தூக்கி கொண்டு சென்றுள்ளார்.
கடைசியில் அதே இடத்தில் வைத்து தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவின் தோழிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. முதலில் கல்லூரி வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக தகவல் வெளியானது.
பின்னரே அது வெடிகுண்டு என தெரியவந்துள்ளது. மட்டுமின்றி துப்பாக்கியால் விளாடிஸ்லவ் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
இதனாலையே பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் முதலில் பயங்கரவாத தாக்குதல் என கருதப்பட்டது. ஆனால் பின்னர் இந்த விவகாரத்தில் பயங்கரவாத தொடர்பு ஏதும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
மட்டுமின்றி 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் ரஷ்யாவின் கிரிமையா பகுதியில் நடத்தப்படும் முதல் முக்கிய தாக்குதல் இதுவெனவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் 20 பேரை சரமாரியாக சுட்டு கொன்ற விவகாரம்: Reviewed by Author on October 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.