முல்லைத்தீவில் தமிழர் நாகரீக மையம் -
தமிழரின் தொன்று தொட்ட வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கான தமிழர் நாகரீக மையம் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு, அம்பாள்புரம், மாங்குளம், மல்லாவி முதன்மை வீதியில் இந்த அங்குரார்பண வைபவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் சிந்தனையில் இத்திறந்தவெளி அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
49 ஏக்கர் பரப்பில் அமையப்பெறவுள்ள இந்த தமிழர் நாகரீக மையத்தில் தமிழர்களின் தொன்றுதொட்ட வாழ்வியலை எடுத்துக்கூறும் பொருட்கள் வாழ்வியலுக்கான செயற்பாடுகள் என்பன அமையவுள்ளது.
அத்துடன் காலப்போக்கில் இது ஒரு தமிழர் வரலாற்று நினைவுச்சின்னங்களை கொண்ட ஒரு அருங்காட்சியகமாக சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வாழ்த்துரையினை வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் நிகழ்த்தியுள்ளதுடன் சிறப்பு விருந்தினர் உரையினை க.சர்வேஸ்வரனும் முதன்மை விருந்தினர் உரையினை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர்.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்ரவன், மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நந்தன், பிரதேச செயலாளர் செ.றஞ்சினி, முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
முல்லைத்தீவில் தமிழர் நாகரீக மையம் -
Reviewed by Author
on
October 20, 2018
Rating:

No comments:
Post a Comment