அண்மைய செய்திகள்

recent
-

500 விக்கெட்களை வீழ்த்தி லசித் மலிங்கா சாதனை -


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 500 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் லசித் மலிங்கா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 254 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதில் லசித் மலிங்கா தற்போது வரை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மொத்தமாக 500 விக்கெட்களை வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார்.

500 விக்கெட்களை வீழ்த்தி லசித் மலிங்கா சாதனை - Reviewed by Author on October 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.