அண்மைய செய்திகள்

recent
-

காந்தி மாதிரி உங்களை கொன்றுவிட்டால்? இயக்குனரின் கேள்விக்கு கமல்ஹாசன் சொன்ன பதில்


மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் காந்தியாக மாறிவிட்டால் உங்களை கொன்றுவிடுவார்களே என்ற போது, இருக்கட்டும் வேற காந்தி வரட்டுமே என்று பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் நான் காந்தியாகவே மாறி வந்து நிற்கிறேன் என்று அங்கிருக்கும் மாணவர்கள் முன் கூறினார்.

அப்போது அங்கிருந்த இயக்குனர் அமீர், அரசியலுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் காந்தியாக மாறிவிட்டால் உங்களை கொன்றுவிடுவார்களே என்று கேள்வி எழுப்பினார்.



அதற்கு கமல்ஹாசன், நானாக இறப்பதை விட, அவர்கள் அந்த வேலையை செய்யட்டுமே, அந்த வேலையை கூட அவர்கள் செய்யமாட்டார்களா என்று கூறினார்.
மேலும், காந்தியாக மாறுவதில் ஒரு அகந்தை தெரிந்தால், அதை நீங்கள் அர்த்தப்படுத்தி கொள்ள வேண்டும். காந்தியாக மாறுவது என்பது எட்டா உயரத்திற்கு நாம் வைத்ததற்கு காரணம், அவரை மகாத்மாவாக ஆக்கியதால் தான், இதுவே நீங்கள் மனிதனாக பாருங்கள். அது மனிதசாத்தியம்.
என்னால் முடியும் என்றால் அது உன்னாலும் முடியும். காந்தியாக மாறிவிட்டால் கொன்றுவிடுவார்கள் என்கிறார்கள், அப்போ வேற காந்தி வரட்டுமே என்று பதிலளித்தார்.
காந்தி மாதிரி உங்களை கொன்றுவிட்டால்? இயக்குனரின் கேள்விக்கு கமல்ஹாசன் சொன்ன பதில் Reviewed by Author on October 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.