பாரதூரமான விளைவுகள் ஏற்படமுன் பாப்பாமோட்டை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்- அடம்பன் பொலிஸ் பொருப்பதிகாரி மடுவத்த வேண்டுகோள்
நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள பாப்பா மோட்டை மீனவர்களுக்கும் தோட்டவெளி மீனவர்களுக்குமான பாப்பா மோட்டை பலகமுனை பாடுப்பிரச்சினை விரைவில் சுமுகமாக தீர்க்கப்படாவிட்டால் உயிராபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் மோதிக் கொள்ள இடமுண்டு என்று மாந்தை மேற்கு அடம்பன் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மடுவத்த அவர்கள் 18-10-2018 காலை 10 மணியளவில் நடைபெற்ற மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்....
இந்த பிரச்சினையானது நீதி மன்றம் சென்று பின்னர் மாவட்ட அரச செயலரிடம் சென்று பங்குத் தந்தையர்களிடமும் சென்று தீர்க்கப்படவில்லை தினமும் மாற்றி மாற்றி வலைகளை அறுத்துக் கொள்கிறார்கள் நேற்றைய தினமும் இது தொடர்பாக சிலரை கைது செய்துள்ளோம் நாம் எமது கடமையை செய்கிறோம் புரிந்துமணர்வோடு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கான அனைவரும் முன்வாருங்கள் இல்லையெனில் இன்று வலைகளை வெட்டிக்கொள்பவர்கள் நாளை விபரீதமான முடிவுகளையும் எடுக்கக் கூடும் என்றும் அடம்பன் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பாரதூரமான விளைவுகள் ஏற்படமுன் பாப்பாமோட்டை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்- அடம்பன் பொலிஸ் பொருப்பதிகாரி மடுவத்த வேண்டுகோள்
Reviewed by Author
on
October 19, 2018
Rating:

No comments:
Post a Comment