ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! -
திருகோணமலையைப் பிறப்பிடமாக கொண்ட தமிழ்நதி என்பவருக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருதினை இந்தியாவின் நியூஸ் 18 தொலைக்காட்சி வழங்கியுள்ளது.
ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.
இவர் எழுதிய ஒரு இனத்தின் மனிதத்தைப் பேசும் கதைகளைக் கொண்ட மாயக்குதிரை சிறுகதை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும், போர் சிதைத்த வாழ்க்கை, புகலிடத்தின் விரக்தி என ஒவ்வொரு கதையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியைப் பதிவு செய்திருப்பதாகவும் மகுடன் விருதுக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டின் மிக முக்கிய சிறுகதைத் தொகுப்பில் மாயக்குதிரைக்கு நிச்சயம் இடமுண்டு என்றும் விருதுக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! -
Reviewed by Author
on
October 29, 2018
Rating:

No comments:
Post a Comment